SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவாயூரில் பா.ஜ. முழு அடைப்பு

2017-11-14@ 00:58:08

திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, ேநற்று குருவாயூர், மணலூரில் பந்த் நடைபெற்றது. குருவாயூர்  நென்மினி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(28). ஆர்எஸ்எஸ் தொண்டர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பாசில் என்ற  மார்க்சிஸ்ட் தொண்டர் கொல்லப்பட்ட வழக்கில் ஆனந்த் 2வது குற்றவாளியாவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த், கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த் தனது நண்பருடன் குருவாயூரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை  செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து குருவாயூர், மணலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பாஜ சார்பில் முழு அடைப்பு  போராட்டம் நடந்தது. கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகள் வந்த கார், கடந்த 4 வருடங்களுக்கு முன்  கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர் பாசிலின் சகோதரருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X