SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போதும் சர்க்கரை நோய்க்கு பயப்படாதீங்க... சிக்கென இருந்தா கவலை இல்லீங்க

2017-11-14@ 00:43:16

தற்போது 40 வயதை கடந்த பெரும்பாலோனர்  சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்போது உடனடியாக இன்சூலின் சுரந்து குளுக்கோஸ் அளவை சீரமைக்கும். ஆனால் போதுமான இன்சூலின் சுரக்காதது மற்றும் இன்சூலின் பணி சீராக இல்லாததன் காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய் உடலில் வேறு சில தாக்கத்தையும் ஏற்படுத்துவதால் நோயாளியின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நோயை உடனடியாக கண்டறியாததாலும், இது குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் பெரும்பாலானோர் இந்த நோய் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். நோய் பாதிப்பால் இருதய நோய் பிரச்னைகள், கண் பார்வை கோளாறு சிறுநீரகம் பாதிப்பு, ரத்த நாளங்களில் கட்டிகள் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை என்பது சிறுவர்களுக்கு ஏற்படும் நீரிழிவாகும். இரண்டாம் வகை என்பது போதிய அளவில் இன்சுலின் காணப்பட்டாலும், அவை உரிய முறையில் செயல்படாததன் விளைவாக ஏற்படுவதாகும்.

இந்தியாவில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களை சேர்ந்த சுமார் 70 மில்லியன் பேர் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நீரிழிவு நோய் பெடரேஷன் அறிக்கையின்படி ஆண்டுதோறும் உலகில் சுமார் 50 லட்சம் பேர் நீரிழிவால் இறக்கின்றனர். இதனை உடனடியாக குணப்படுத்த முடியாது என்றாலும், கடுமையான உணவு முறையை பின்பற்றுவதன் மூலமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

நீரிழிவை கட்டுப்படுத்த சிறந்த உணவுகள்

பசுமையான கீரைகள்: குறைந்த கலோரி கொண்ட, அதிக நுண்ணுட்ட, நார் சத்து கொண்டவரை கீரைகள். இவற்றில் எளிதாக ஜீரணிக்கும் கார்போ ஹைடிரேட்டுகள் உள்ளது. முளைக்கீரை, பசலை, முருங்கை கீரை போன்ற ஏதாவது ஒரு கீரையை தினம்சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கும்.
லவங்கப்பட்டை : சுவையானது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். ஆய்வில் தொடர்ந்து 90 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால், கணிசமான அளவில் ரத்த சர்க்கரை குறையும் ென தெரிய வந்துள்ளது. சீனி துளசி :  நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். நார் சத்து மிகுந்தது. குளுகோஸ் அளவு அதிகரிக்காது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-11-2017

  24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • YuvaraniVinayakaPrize

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

 • ExpresshighwayNitin

  தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

 • ThiruvannamalaiKarthikaiDeepa

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

 • Mike_Hughes

  பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்