ஆபத்தான அலர்ஜியை தடுப்பது எளிது

2017-11-13@ 21:13:18

ஒவ்வாத பொருட்கள் உடலுக்குள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை இதன் அறிகுறியாகும். மேலும் தட்பவெட்பம், உணவு, சுற்றுச்சூழல் மாசு உள்பட பல காரணங்களாலும் அலர்ஜி ஏற்படும். மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடக்கூடாது. மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிப்பதால் பெரும் தொல்லைக்கு ஆளாக நேரிடும். சிலருக்கு சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்பளங்களும் தோன்றலாம்.
குரல் வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி, அடிவயிற்றில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றை பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்க செய்யும். முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரி, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அலர்ஜியை தடுக்க சிறந்த வழிகள். அலர்ஜி இருப்பவர்கள் வெளியில் செல்லும்போது வழக்கத்துக்கு மாறான புதிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல், மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்த பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம். பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டி பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். புதிதாக எடுக்க துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவுகள் அலர்ஜி பிரச்னை இருக்கும்போது ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.பசலைக்கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
மேலும் செய்திகள்
உஷ்ஷ்... அப்பாடா, வெயிலுக்கு சித்தாவில் இருக்கு சூப்பர் டிப்ஸ்
புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்
காரில் பிரேக் லெவல் எப்படி? உஷார்..!
நடமாடும் சலவையகம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி
தபால்தலைகளும் அதன் பின்னணியும்
வெயிலை விட வேகமாக நோய் பரப்பும் கோடைமழை: எவ்வளவு மகிழ்ச்சியோ... அவ்வளவு ஆபத்து
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
LatestNews
சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு
10:26
வேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்
10:20
காரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
10:16
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்
10:10
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
10:06
திருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது
10:04