SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.99 கட்டணத்தில் விமான டிக்கெட்: ஏர் ஏசியா நிறுவனம் அதிரடி சலுகை

2017-11-13@ 17:55:14

கோலாலம்பூர்: மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா, தற்போது அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதில், ரூ.99 சலுகை கட்டணத்தில் உள்நாட்டு பயணம் மற்றும் ரூ.444 சலுகை கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு முறை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சலுகையை பெற இன்று இரவு முதல் 19ம் தேதி வரையில் மொபைல் ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையத்தில் முன்பதிவு செய்யலாம். இந்த கட்டணச் சலுகையில் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்.

ஏர் ஏசியா பெர்ஹாட், ஏர்ஏசியா எக்ஸ் பெர்ஹாட், இந்தோனேசியா ஏர் ஏசியா எக்ஸ், இந்தோனேசியா ஏர் ஏசியா மற்றும் தாய் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஆண்டு இறுதி கொண்டாட்டமாக ஏர் ஏசியாவுடன் இணைந்துள்ள பிரதான மொபைல் வாலட்டான மொபிக்கிவிக் ஆப் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும்போது கட்டணத்தில் 1000 ரூபாய் சலுகைளை பெறலாம். மேலும், விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவு செய்துவிட்டால் எந்த காரணத்திற்காகவும் பயணத்தொகை திரும்ப அளிக்கப்பட மாட்டாது எனவும் விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்