SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள்!

2017-11-13@ 10:24:45

நன்றி குங்குமம் முத்தாரம்

நம்பர்ஸ் கேங்ஸ்

தென் ஆப்பிரிக்கா விலுள்ள பால்ஸ்மூர் சிறை ஃபேமஸாக காரணம், இங்கு சிறைப்பட்ட நெல்சன் மண்டேலா, அடுத்து நம்பர்ஸ் குழு. 26,27,28 என மூன்று குழுக்கள்தான் ஜெயிலுக்கு இன்சார்ஜ். இந்த மூன்றில் ஒன்றில் ஜாயினாகியே தீரவேண்டும். நோ சொன்னால், கற்பழிப்பு அல்லது கொலை நடக்கும் சான்ஸ் உண்டு. 27 கேங்கில் சேர, ஜெயிலரை கத்தியால் குத்தவேண்டும். 28 இல் சேர கோல்டு, சில்வர் என இரு பிளான்கள் உண்டு. கோல்டில் பிறரோடு சண்டையிட வேண்டும். சில்வரா? சிறைக்காலம் முழுவதும் பாலியல் அடிமையாக இருக்கும் சான்ஸ் கிடைக்கும்.

ட்ரியாட் கேங்ஸ் (சுன் யீ ஆன்)

17 ஆம் நூற்றாண்டில் உருவான சீன மாஃபியா இது. 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது, தைவான், மக்காவ், ஹாங்காங் ஆகிய இடங் களுக்கு சுன் யீ ஆன் குழு இடம்பெயர்ந்தது. மொத்தம் 57 சங்கங்கள், 60 ஆயிரம் உறுப்பினர்கள். போதைப்பொருள், விபச்சாரம், ஆட் கடத்தல் என அத்தனையிலும் ஜெயித்த குழு இது. சுன் யீ ஆன் குழுவின் ஸ்பெஷல், கொலை செய்ய கத்திதான் ஆயுதம். ஒருவரைக் கொன்றால் அவரின் மூட்டு எலும்பை எடுத்துச் செல்வது இவர்களின் ஸ்டைல்.

டி கம்பெனி

இந்தியாவில் தாவூத் இப்ராகிம் எனும் போலீஸ் கான்ஸ்டபிளின் பிள்ளை வளர்த்தெடுத்த சுதேசி மாஃபியா குழு. 1970 -1980 வரை போதைப்பொருள், ஆட் கடத்தல், கள்ளநோட்டு அச்சிடல், திரைப்படத்தயாரிப்பு, ரியல்எஸ்டேட் என அத்தனை தொழிலிலும் ராஜாதிராஜா இவர்கள்தான். 1993 ஆம் ஆண்டு பிளான் செய்த மும்பை குண்டுவெடிப்பில் 257 பேரை சொர்க்கம் அனுப்பியது தாவூத்தின் சாதனை. தற்போது இதன் தலைவர் பாகிஸ்தானின் கராச்சியில் தஞ்சமடைந்து உலகிற்கு தன் சேவையைத் தொடர்ந்து வருகிறார்.

யமகுசி குமி

1915 ஆம் ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் யமகுசியைத் தொடங்கியவர் ஹாருகிச்சி யமகுசி. அரசு பெயில் கொடுக்காமல் ஜெயிலில் தள்ளும் அத்தனை மேட்டர்களையும் கர்ம சிரத்தையாக செய்யும் குழு இது. 1985 -89 ஆண்டுகளில் யமகுசி குழுவால் கொல்லப்பட்டவர்களை எண்ணுவதே  பத்திரிகைகளுக்கு தினசரி த்ரில் வேலை. வன்முறை மாஃபியா குழுக்களுக்கு யாகுஸா என்று பெயர். 1990-2000 வரை ஜப்பான் மாஃபியா குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். அதிலும் லீடிங் யமகுசி டீம்தான். சட்டங்கள் காலரைப்பிடிக்க, யமகுசி குழு உறுப்பினர்கள் கட்சி மாறினார்கள். தற்போதைய மெம்பர்களின் எண்ணிக்கை 11,500.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்