SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கை போடு.... காலை ஒடி

2017-11-12@ 00:05:12

கொலை, கொள்ளை, மிரட்டல், கந்துவட்டி, உருட்டல், கூலிப்படை ஆகியவற்றிற்கு பெயர் போன நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல்லை போலீஸ் கையில் எடுத்துள்ள புதிய தத்துவம் “வழக்கை போடு, காலை ஒடி’’. இது குற்றவாளிகள், திருட்டு வழக்கில் சிக்கியவர்கள், செயின் பறிப்பு திருடர்கள் மீது....அல்ல. சாதாரண வழக்கில் புகார் கொடுத்த வக்கீலுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிப்பார்களா, அந்த கதியில் தான் சென்று கொண்டிருக்கிறது நெல்லை போலீஸ். இவர் தானே புகார் கொடுத்தார், இவரை எப்படி நள்ளிரவில் வீட்டுக்கு சென்று கைது செய்தார்கள்.

இவரது கால் எப்படி உடைந்தது என்ற கேள்விகளுக்கு எல்லாம் போலீசாரிடம் பதில் இல்லை. கடைசியில் வள்ளியூர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு நபர் கமிஷனை அனுப்பி வைத்த போது தான் வக்கீலை விடுவித்து இருக்கிறார்கள். இதையடுத்து போலீசுக்கு எதிராக ஒரு சேர திரண்டுள்ளனர் நெல்லை வக்கீல்கள். இதை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரியும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். தற்போதும் இன்ஸ்பெக்டரை காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களாம். ஆனால் இன்ஸ்பெக்டரை கைது செய்யவேண்டும். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டத்தை தொடங்கி வக்கீல்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்