SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயிறு நிரம்புது.... பாக்கெட் உப்புது....!

2017-11-12@ 00:05:10

ஈரோடு சப்-டிவிசன் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த ‘’பார்’’ களில் விதிமீறி 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை ஜோராக நடக்கிறது. மேலும், அருகில் உள்ள பெட்டிக்கடைகளிலும் மதுபானம் விற்பனை ஜரூராக நடக்கிறது. மேலும், டாஸ்மாக் கடைகள் உள்ள இடங்களில் ‘’பார்’’ இல்லாத பகுதிகளில் பெட்டிக்கடைகளை அமைத்து, அங்கேயே அனுமதியின்றி ‘’பார்’’ நடக்கிறது. ‘’குடி’’மகன்களின் கூட்டம் அதிகமாக குவியும்போது, போலி சரக்குகளும் உள்ளே இறங்கி விடுகிறது. போலி சரக்கு, கூடுதல் விலைக்கு மது விற்பனை, ‘’பார்’’களில் அனுமதியின்றி சரக்கு விற்பனை, அனுமதியின்றி நடத்தப்படும் ‘’பார்’’ என சட்ட விரோத செயல்களுக்கு பஞ்சமில்லை. இதை கண்டறிந்து தடுக்க வேண்டியது போலீசாரின் கடமை.

ஆனால், எதுவுமே தெரியாதது போல் போலீசார் நடந்து கொள்கின்றனர். யாரேனும் புகார் தெரிவித்தால் கூட நடவடிக்கை எடுப்பதில்ைல. இதற்கு காரணம், போலீசாரின் பாக்கெட் அவ்வப்போது “உப்பி’’ விடுகிறது. அடிக்கடி வயிறும் நிரம்பி விடுகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட இடங்களில், தற்போது கடைகள் இல்லாத பகுதிகளில் போலீசாரே ஏலம்விட்டு சட்டவிரோத மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளனர். இதன்மூலமாக மாதந்தோறும், அவரவர் பதவிக்கு ஏற்ப, கணிசமான தொகை அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட போலீசாருக்கு கிடைத்து வருகிறது. பணம் கொழிக்கும் இடமாக இவை இருப்பதால், போலீசார் இங்கேயே சுற்றி சுற்றி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்