SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பாச்சி ஆர்.ஆர் 310 எஸ் பைக் சிறப்பம்சம்

2017-11-12@ 00:05:07

இந்தியாவை சேர்ந்த பிரபலமான டிவிஎஸ் நிறுவனம் முற்றிலும் புதிய செயல்திறன் கொண்ட அப்பாச்சி ஆர்.ஆர் 310எஸ் பைக்கை இந்தாண்டு நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளது. பைக்கின் உள்கட்டமைப்பு புதிய மாற்றத்துடன், முற்றிலும் புதிய வடிவில் தயாராகியுள்ளது. இந்திய சாலையில் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் சோதனை செய்யப்பட்ட போது, அது பலரது கண்களை கவர்ந்தது. அதன்மூலமாகவே இந்திய சந்தையில் இந்த பைக் பெரிய எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு தயாராகியுள்ள இந்த பைக்கின் முன்பக்க சக்கரத்தில் அப்சைடு டவுன் போர்க்ஸ் உள்ளது. பின் சக்கரத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளிஸ்டர், ஸ்பிளிட் இருக்கைகள், ஏபிஎஸ் தேர்வு போன்ற தொழில்நுட்ப அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக், இந்தியாவில் பல நாட்களாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த பைக் கேடிஎம் ஆர்.சி 390, பென்னெலி 302ஆர், கவாஸாகி நிஞ்சா 300 மற்றும் யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர்3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் இந்தியாவில் 2 லட்சம் விலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்