SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக் இந்தியாவில் அறிமுகம்

2017-11-12@ 00:05:05

இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் ரக பைக் மாடலாக பஜாஜ் அவென்ஜர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போட்டி இல்லாமல் சோலோவாக வலம் வரும் பஜாஜ் அவென்ஜருக்கு நெருக்கடியை தரும் வகையில், புதிய க்ரூஸர் மாடலை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புகழ்பெற்ற இன்ட்ரூடர் க்ரூஸர் மோட்டார் சைக்கிள் பிராண்டில் இப்புதிய மாடல் வர இருக்கிறது. சுஸுகி இன்ட்ரூடர் 150 என்ற இந்த மாடல் 2017 நவம்பர் 7 அன்று விற்பனைக்கு வந்துள்ளது.

சுஸுகி இன்ட்ரூடர் எம்1800ஆர் மோட்டார் சைக்கிளின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த மோட்டார் சைக்கிளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் பயன்படுத்தப்படும், 154.9 சிசி ஏர்கூல்டு இன்ஜின்தான் இந்த புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. அதே நேரத்தில், க்ரூஸர் ரகத்திற்கு தக்கவாாறு ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர நிலையில் சிறந்த டார்க் திறனை வழங்கும் விதத்தில், இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
முரட்டுத்தனமான தோள்பட்டை அமைப்பு கொண்டதாக இருக்கும் வகையில், ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க் வடிவமைப்புகள் உள்ளன. பெரிய அளவிலான ஹெட்லைட் அமைப்பும் வசீகரிக்கிறது. பக்கெட் ஸ்டைல் ஓட்டுனர் இருக்கை இதன் முக்கிய சிறப்பு.

இந்த மோட்டார்சைக்கிளில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரட்டை புகைப்போக்கி அமைப்பு, டிஸ்க் பிரேக், கருப்பு நிற அலாய் வீல் போன்றவை முக்கிய சிறப்புகளாக இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மற்றும் அவென்ஜர் க்ரூஸ் 220 மாடல்களுக்கு போட்டியாக இந்த பைக் இருக்கும். இது சற்று பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதால், பஜாஜ் அவென்ஜர் மோட்டார் சைக்கிள்களைவிட சற்றே விலை அதிகமாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 1 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்பது இப்போதைய கணிப்பு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்