SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரேஸியா புதிய ஸ்கூட்டர்

2017-11-12@ 00:05:03

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. தற்போது புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா. ‘’கிரேஸியா’’ என்ற பெயரில் 2017 அக்.25ந்தேதி முதல் இப்புதிய ஸ்கூட்டருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியுள்ளது. 2,000 முன்பணம் செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா இருசக்கர வாகன டீலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹோண்டா டியோ ஸ்கூட்டர் போன்றே, இப்புதிய ஸ்கூட்டர் மாடலும் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும், இளம் தலைமுறையினரை கவரும் வகையிலும் இருக்கும். இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே சில ஹோண்டா டீலர்களிடம் தென்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ‘‘வி’’ வடிவிலான ஹெட்லைட் அமைப்புடன், பிற ஹோண்டா ஸ்கூட்டர்களில் இருந்து சற்றே வேறுபட்ட டிசைன் சிறப்பம்சங்களுடன் வருகை தர இருக்கிறது. ஆக்டிவா ஸ்கூட்டரில் இருப்பது போன்ற முன்சக்கரம் தெரிகிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹோண்டாவின் விசேஷமான காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஸ்கூட்டரில் ஆக்டிவாவில் பயன்படுத்தப்படும் 110 சிசி இன்ஜின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், 125 சிசி இன்ஜின் ஆப்ஷனும் ஹோண்டா வசம் இருக்கிறது. புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய ஸ்கூட்டர் மூலமாக ஹோண்டாவின் சந்தை மிக வலுவாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்