SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சார பைக்குகளை களமிறக்கும் ஏகே-47 நிறுவனம்!

2017-11-12@ 00:04:59

புத்தம் புதிய மின்சார மோட்டார் சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது கலாஷினிகோவ் நிறுவனம். ரஷ்யாவை சேர்ந்த கலானிஷிகோவ் நிறுவனம் ஏகே-47 எந்திர துப்பாக்கி தயாரிப்பு மூலம் உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் IZH நிறுவனம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நிறுவனம் தற்போது மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்த நிறுவனம், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம்செய்ய உள்ளது. இது, என்டியூரோ ரக மோட்டார் சைக்கிள் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்நாட்டு போலீஸ் துறையிலும், ராணுவத்திலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறப்பம்சங்களை இந்த மோட்டார் சைக்கிள் பெற்றிருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த மின்சார மோட்டார் சைக்கிள் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பயணிக்கும் தூரத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்த மின்சார மோட்டார் சைக்கிள், அனைத்து விதமான சாலைகள் மற்றும் நிலபரப்புகளில் செல்லும் தன்மை கொண்டது. திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டாரை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இருப்பதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட இருக்கும் போலீசாருக்கு, கலானிஷிகோவ் நிறுவனம் தயாரிக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 50 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. போலீசாருக்கான மாடல் மட்டுமின்றி, ராணுவத்திற்கான விசேஷ மாடலையும் இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்க உள்ளது. ராணுவத்திற்காக தயாரிக்கப்படும் மாடலானது, ரேடார் கண்களில் சிக்காத வகையிலான வடிவமைப்பையும், சப்தமில்லாமல் எதிரிகளின் பகுதிகளில் நுழைந்து செல்லவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒரு புதிய ஹைப்ரிட் ரக மோட்டார் சைக்கிளை அமெரிக்காவை சேர்ந்த நாசா நிறுவனம், அந்நாட்டு ராணுவத்திற்காக உருவாக்கி வருகிறது. சைலென்ட் ஹாக் என்ற பெயரில் இப்புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்