SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் BT கனெக்ட் வயர்லெஸ் மாட்யூல்

2017-11-08@ 18:04:48

இந்த BT மாட்யூல் 3.5mm இன்புட் உள்ள எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது. ஜிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிட். நிறுவனம் IT உதிரி பாகங்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. ஜிப்ரானிக்ஸ் நிறுவனம், புதிய வயர்லெஸ் மாட்யூல் BT கனெக்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ளூடூத் மாட்யூல், 3.5mm இன்புட் கொண்ட எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது. பின்வரும் சாதனங்களை கன்வெர்ட் செய்து ஸ்மார்ட்ஃபோன், டேப்ளட் அல்லது கணினியிலிருந்து வயர் இல்லாமல் இசையைக் கேட்கலாம்.
 
● 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஸ்பீக்கர்கள்.
● 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஹோம் தியேட்டர்.
● ஆக்ஸ் இன்புட் கொண்ட கார் ஸ்டீரியோ.
● ஹெட்போன்கள்.
 
BT கனெக்ட் மிகவும் லேசான சிறிய மாடலாகும். வயர் இல்லாமல் உங்கள் சாதனத்துடன் இணைக்கவும், தொடர்ச்சியாக இசையைக் கேட்டு மகிழவும் இந்த BT கனெக்ட் உதவும். ஈசி பிளக் மற்றும் பிளே அம்சத்துடன், ஆப்பரேட் செய்ய எளிதானது. இந்த சாதனத்தில் பில்ட்-இன் மைக் இருப்பதால், இணைக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோனிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்கமுடியும். இந்த நேர்த்தியான மாட்யூல், ஆடியோ அவுட்புட்டிற்கான 3.5mm ஜேக்குடன் வருகிறது. வால்யூம் கண்ட்ரோல் பட்டன்கள், MP3 பிளேபேக்கிற்கான MicroSD ஸ்லாட், மீடியா கண்ட்ரோல் பட்டன் மற்றும் ஆன்/ஆஃப் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. மாட்யூலானது லேசான கிளிப் வடிவத்தில் இருக்கும், எனவே எந்த துணியிலும் பின் செய்துகொள்ளலாம். எந்தவொரு சாதனத்திலும் இதை கனெக்ட் செய்து, அந்த சாதனத்தை முற்றிலும் வயர்லெஸ்ஸாக்கலாம். தங்களின் பொழுதுபோக்கை பகட்டாக மாற்ற விரும்புபவர்களுக்கு இந்த மாட்யூல் மிகவும் வசதியானது.

இந்த சாதனத்தை ஹோம் ஸ்பீக்கர்கள்/ஹெட்ஃபோன்கள் போன்ற ஏதாவது ஒன்றில் இணைத்து, வயர் இல்லாமல் இசைக் கேட்கும் சிறந்த அனுபவத்தைப் பெறலாம். ப்ளூடூத் மாட்யூல் வெளியீட்டின்போது, இந்திய ஜிப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி கீழ்கண்டவாறு கூறினார்: 'வயர்லெஸ் தயாரிப்புகள் என்றாலே, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஜிப்ரானிக்ஸ் தான் முன்னணியில் இருக்கிறது! வயர்லெஸ் சந்தையில் மீண்டும் ஒரு முறை எங்கள் அடித்தளத்தை வலுப்படுத்த, BT கனெக்ட் ஸ்மார்ட் போர்டபிள் வயர்லெஸ் மாட்யூலை வழங்குகிறோம். அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு 'ஸ்மார்ட்' என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறோம். வயர்லெஸ் அம்சத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் அம்சங்களின் செயல்பாட்டு வடிவத்தை மனதில் வைத்து, எந்த இடத்திலும் எந்தவொரு சாதனத்திலும் இணைக்கும்படி வடிவமைத்துள்ளோம்.'
இந்த மாட்யூலின் ப்ளூடூத் வரம்பானது எந்தவித குறுக்கீடுமின்றி 10 மீட்டர்கள் வரை இருக்கும். கிளிப் டிசைன் இருப்பதால் கைகளில் வைத்துக்கொண்டு சிரமப்படத் தேவையில்லை. எளிதாக உங்கள் சாதனத்துடன் கனெக்ட் செய்து தடையில்லா இசை அனுபவத்தைப் பெற்று மகிழலாம். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணக் கலவையில் கிடைக்கிறது. இந்த ப்ளூடூத் மாட்யூல் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

 • Apollo11NeilArmstrong

  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்