SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருத

2012-12-22@ 00:27:51

திண்டுக்கல்: திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2010ல் மேலாண்மை பொன்னுசாமி, 2011ல் காவல்கோட்டம் நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த நாவலாசிரியர் செல்வராஜ், எழுதிய தோல் என்ற நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கமாக யதார்த்த மொழிகளில் எழுதியுள்ளார். 26 அத்யாயங்களாக 117 கேரக்டர்களுடன் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலை இவரது உள்ளத்தை வருத்தவே நாவலாக வடிவமைக்க தொடங்கினார்.பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பிரசுரிக்கவில்லை. கைப்பிரதியாக இருந்த இந்த நாவலை நண்பர் ஒருவர் பார்த்து அதன் ஆழமான கருத்தை வியந்து புத்தகமாக வெளியிட உதவியுள்ளார். இந்த நாவலுக்காக தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு சிறந்த நாவலுக்கான விருதை அளித்தது. இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளது.இவர் எழுதிய முதல் நாவல் மலரும்-சருகும் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட தேனீர் எனும் நாவல் திரைப்படமாக வந்துள்ளது. இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதை, 50 ஓரங்க நாடகம், இருவரின் வாழ்க் கை வரலாறு, 6 நாவல்கள் எழுதியுள்ளார். விருது கிடைத்த நாவல் இவர் எழுதிய 5வது நாவலாகும்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்