SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி

2017-10-22@ 02:28:03

ஷார்ஜா: இலங்கை அணியுடன் நடந்த 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி 43.4 ஓவரில் 173 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லாகிரு திரிமன்னே 62 ரன், டிக்வெல்லா 22, சண்டிமால் 16, வர்தனா 13, தனஞ்ஜெயா 18, லக்மல் 23* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹசன் அலி 3, ஷதாப் கான், இமத் வாசில் தலா 2, ஜுனைத் கான், உஸ்மான் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 39 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து எளிதாக வென்றது. இமாம் உல் ஹக் 2, பகார் ஸமான் 17, முகமது ஹபீஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். பாபர் ஆஸம் 69 ரன் (101 பந்து, 5 பவுண்டரி), சோயிப் மாலிக் 69 ரன் (81 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி ஷார்ஜாவில் நாளை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 டி20 போட்டிகளில் மோதுகின்றன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2018

    20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MigrantsMexicoAmerica

    திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

  • OklahomaBushFire

    மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்