SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிபா யு-17 அரை இறுதிக்கு முன்னேறியது மாலி

2017-10-22@ 02:27:10

கவுகாத்தி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, மாலி அணி தகுதி பெற்றுள்ளது.
கவுகாத்தி, இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் கானா - மாலி அணிகள் மோதின. தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாலி அணி வீரர்கள், கானா கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஹட்ஜி டிரேம் அபாரமாக கோல் அடிக்க மாலி அணி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மாலி அணிக்கு, 61வது நிமிடத்தில் டெமூஸா டிரயோர் கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்தார். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய கானா அணிக்கு, 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் குதுஸ் முகமது கோல் போட்டார். கடைசி கட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் மாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் - ஈரான் அணிகளிடையே இன்று நடைபெறும் கால் இறுதியில் வெற்றி பெறும் அணியை மாலி அரை இறுதியில் சந்திக்கிறது. கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 2வது கால் இறுதியில் இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

  • FloridashootingTrump

    புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்