SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானுக்கு எதிராக கோல் மழை ஆசிய கோப்பை ஹாக்கி பைனலுக்கு இந்தியா தகுதி

2017-10-22@ 02:25:38

தாக்கா: ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டிரா செய்தாலே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற சாதகமான நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான் வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடியதால் இடைவேளை வரை கோல் ஏதும் விழாமல் 0-0 என சமநிலை நிலவியது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பந்தை துடிப்பாக கடத்திச் சென்று நெருக்கடி கொடுத்த இந்திய அணிக்கு, 39வது நிமிடத்தில் சத்பிர் சிங் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஹர்மான்பிரீத் சிங் (51வது நிமிடம்), லலித் உபாத்யாய் (52வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (57வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி ஸ்தம்பித்து நின்றது. ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்தியா, சூப்பர் 4 சுற்றில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கம்பீரமாக பைனலுக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்