SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணம்: இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு..!

2017-10-21@ 13:25:53

சிவகங்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த லெ்லபாண்டியன் என்பவரது மகள் பொன்னுத்தாயி என்பவர், டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்துள்ள பொட்டிச்செட்டிப்பட்டியை சேர்ந்த சிறுவன் பாவேந்திரன், காலையில் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கெண்டிச்சட்டிப்பட்டியை சேர்ந்த யோகேந்திரன் என்பவரது 5 வயது மகளான ரோஷினி இறந்துள்ளார். இதேபோன்று பழநி மருத்துவ நகரை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி சந்தியா டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் காவியா என்ற 3 வயது சிறுமியும் கௌஷ்யா பேகம் என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களத்தை சேர்ந்த அன்பு என்ற 6 வயது சிறுவனும் டெங்குவால் உயிரிழந்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்