SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச அளவில் பேஸ்புக் மூலம் இணைந்து விவசாயிகளுக்கு உதவும் தமிழக மகளிர் 2ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி

2017-10-21@ 13:12:38

துபாய் :  மகளிர் மட்டும் சேவை திக்கெட்டு பரவட்டும் என்ற வகையில் முகநூல்லில்  இரண்டு உறுப்பினர்களுடன்  தொடங்கப்பட்ட  மகளிர் மட்டும் என்ற‌ முகநூல் நூல் குழுமம் சர்வதெச அளவில் தமிழக மகளிரை உள்ளடக்கிய‌  இந்தக் குழுவானது, இன்று 8000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் எளிய மக்களுக்கு கல்வி,விவசாயம்,சிறுதொழில் போன்றவற்றிர்க்கு உதவி வருகின்றனர்


உலகின் பல பகுதிகளில் வசிக்கும்  தமிழர்களை இணைக்கும் வகையில், பெண்களால், பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும்  “மகளிர் மட்டும்” எனும் முகநூல் குழு தனது முதல் ஆண்டை நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது..

கடந்த ஆண்டு அக்டோபரில்  இரண்டு உறுப்பினர்களுடன்  தொடங்கப்பட்ட இந்தக் குழுவானது, இன்று 8000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில்  வாரந்தோறும் சமையல், பாட்டு, புகைப்படம், ஒப்பனை  போன்ற துறைகளில் போட்டிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அது மட்டுமின்றி தேசத்தில் நேசத்தை வளர்க்கும் வகையில், சமூக நலன் கருதி, சாலையோரத்தில் வாழும், வசிப்பிடமில்லா ஏழைகளுக்கு அன்னதானம், இரத்த தான முகாம், காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கிய திட்டம் போன்ற நல்ல பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் , வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் “Aid and Educate” எனும் திட்டத்தை நிகழ்த்தினர்.  சிறந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவரை கல்வி உதவி திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுத்து அவரின் பொறியியல் படிப்புக்கு  ரூ.40,000 கல்வி உதவித் தொகை வழங்கினர்.

”மகளிர் மட்டும்” முகநூல் குழு தங்களின் முதலாண்டு நிறைவு விழாவை  கொண்டாடும் வகையில் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, பெங்களூர் மற்றும் துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் ஒரே நாளில்  சிறப்பாக நடைபெற்றது.

”பொழுது போக்கு மட்டுமே  எங்கள் நோக்கமல்ல. சமூக அக்கறையுடன் பிறருக்கு உதவுவதும் எங்களின் குறிக்கோள்” என்று மகளிர் மட்டும் உதவி நிர்வாகி பெனாசிர் பாத்திமா கூறினார்.

அடுத்த திட்டமாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் எம் குழு உறுப்பினர் உதவியுடன் தமிழகத்தில்  கல்லூர் என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து, தன்ணீர் இல்லாத கிணற்றை ஆழப்படுத்துவதற்காக ரூ.40,000 பண உதவி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 10 விவசாயிகளுக்கு உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொகையை உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், உறுப்பினர்களின் பங்களிப்பு இல்லையெனில் சமூக சிந்தனையுடன் கூடிய இது போன்ற நல்ல காரியங்களை செய்ய இயலாது என்றும் அமைப்பின் நிர்வாகி வஹிதா பானு  கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • annanagar_iknt

  அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • perunthu_makkal11

  பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

 • republice_dayy1

  குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்