SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் என பாலியல் தொல்லை

2017-10-20@ 00:59:03

திருமலை: தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை செய்த பாதிரியார் மீது மனைவி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபல்லிக்கூடம் அடுத்த ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர். இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் பிரகாஷ்ராவ்பாளையம், ஜெக்கன்னாபேட்டை, மஸ்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ச்சுகளுக்கு காப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜீவன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எபிநேசர் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் தனியாக வசித்து வருகிறார். எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறுவாராம்.

அவ்வாறு வருபவர்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம் புகார் செய்தார். இந்த புகாரை பெற்ற அவர், இதுபோன்றவர்களை சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் 5 பெண்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், எபிநேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார்.
இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன்.
ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்