SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தீபா பேரவை போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி

2017-10-18@ 00:39:02

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் வரும் 23ம் தேதி  ஆர்ப்பாட்டம் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கள் (அதிமுக) தாக்கல் செய்த மனுவில்,  ஜெயலலிதா மரணத்திற்குப் பின், அவரது  சகோதரர் மகள் தீபா துவங்கியுள்ள எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் சேர்ந்து அந்த பேரவையின் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறேன். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பிற மருத்துவர்கள் செல்வாக்கான நபர்கள் என்பதால்,  ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா  பேரவை கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரியில் வரும் 23ம் தேதி  போராட்டம் நடத்த அனுமதி கோரி  சத்துவாச்சேரி இன்ஸ்பெக்டரை அணுகிய போது, அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடக்க  இருப்பதாகக் கூறி, அனுமதி மறுத்து விட்டார். எனவே, இன்ஸ்பெக்டரின் உத்தரவை ரத்து செய்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை  நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை  ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2018

    20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MigrantsMexicoAmerica

    திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

  • OklahomaBushFire

    மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்