SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுங்கள்

2017-10-17@ 12:48:08

தீபாவளியை விபத்தில்லா நாளாக கொண்டாட வேண்டும் என்று தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரில் தீவிபத்து ஏற்படக்கூடிய 34 இடங்கள் கண்டறியப்பட்டு ஒரு நீர்தாங்கி வண்டி குழுவினருடன், குடிநீர்வாரிய தண்ணீர் லாரியும் நேற்று முதல் 24 மணிநேரமும் நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களிலும் பணியாளர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து தீயணைப்பு ஊர்திகளும் ஜிபிஎஸ் வாயிலாக கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை விபத்தில்லா திருநாளாக கொண்டாட பொதுமக்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது:   

செய்யக்கூடியவை


* பட்டாசு வெடிக்கும்பொழுது இறுக்கமான பருத்தி ஆடையை அணியவேண்டும்.

* பாதுகாப்பிற்காக காலணி மற்றும் கண்ணாடி அணியவேண்டும்.

* பட்டாசு வெடிக்கும் பொழுது ஒருவாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பக்கத்தில் பாதுகாப்பிற்கு வைத்திருக்க வேண்டும்.

* பட்டாசு பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்

* ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஜன்னல் அல்லது கதவு போன்ற எந்தவொரு தொடக்கத்தையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போட வேண்டும்.

* நீண்ட ஊதுவர்த்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

* ஆடையில் தீப்பற்றினால், ஓடாதீர்கள், உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள், நின்று கீழே படுத்து உருளுங்கள்.

* பட்டாசு வெடிக்கும் பொழுது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதவை

* பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் சிறுவர்களை பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

* ஒருபோதும் வெடிக்காத பட்டாசு மற்றும் மத்தாப்புகளை மீண்டும் வெடிக்காதீர்கள்

* வீட்டிற்கு அல்லது கட்டிடங்களுக்கு மிக அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

* பட்டாசுகள், ராக்கெட்டுகள், பூச்சட்டிகள் (புஸ்வானம்) ஆடம்பாம் போன்றவைகளை கைகளில் வைத்து வெடிக்காதீர்கள்.

* பட்டாசுகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

* பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்க தீக்குச்சிகளை பயன்படுத்தாதீர்கள்.

* தீக்காயத்தில் ஒட்டியுள்ள ஆடையினை அகற்றாதீர்கள்

* தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்றவற்றினை கொட்டவேண்டாம்.

* பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்கக்கூடாது

* பெட்ரோல் பங்குகளுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது

* மூடிய பெட்டிகளில், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்

* பட்டாசுகளை கூட்டம் நிறைந்த தெருக்கள் மற்றும் சாலைகளில் வெடிக்காதீர்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்