SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசும், பாதுகாப்பும்

2017-10-17@ 11:38:54

தீபாவளியை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது என ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளுறை மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆனந்த் பிரதாப் சொல்கிறார்:
 
தீபாவளி என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான். புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள், புதுப்படம் என கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது.  இப்படி கொண்டாட்டமான தீபாவளியில் கவலையான விஷயம் பட்டாசால் ஏற்படுற விபத்துக்கள் தான். பயமுறுத்துவதற்காக இதை சொல்லவில்லை. ஒரு அரசு மருத்துவராக நான் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட பல விபத்துகளில் சிக்கியவர்களை பார்த்திருக்கிறேன். அதனால்தான் தீபாவளியை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் பெரியவர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அப்படி வெடிக்கும் போது நீண்ட குச்சியிலான வத்திகளை பயன்படுத்துங்கள். பத்த வைத்ததும் தொலைவில் விலகி நில்லுங்கள். ராக்கெட் செலுத்த கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது மட்டுமல்ல  கம்பி மத்தாப்பு, பூத்தொட்டி என எந்த வகையான பட்டாசுகளை பயன்படுத்தும் போதும் பட்டு, ஸ்டெர்லின்  ஆடைகள் வேண்டாம். தீக்காயம்  ஏற்படும் போது இந்த ஆடைகள் அப்படியே உடலுடன் ஒட்டிக் கொள்ளும். எனவே பருத்தி ஆடைகள் நல்லது.

அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை தவிர்ப்பது நல்லது. ஊருக்கு மட்டுமல்ல உங்க காதுக்கும் நல்லது. அதனால் வெடிக்கும் போது காதை மூடிக் கொள்வது நல்லது. மேலும்  நம் வீட்டிலேயோ, அக்கம் பக்கத்திலோ  நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பட்டாசுகளை வீட்டுக்கு அருகில், தெருவில், மொட்டை மாடியில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில், திடலில் வெடிக்கலாம். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வம்பை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிப்பதோ, கொளுத்தவோ கூடாது. அவர்கள் அதனை கையில் எடுத்து விடும் ஆபத்து இருக்கிறது.
பட்டாசு வெடிக்கும் போது காயம் ஏற்பட்டால், உடனடியாக அதன் மீது தண்ணீர் ஊற்றுங்கள். அதுதான் செய்ய வேண்டிய முதலுதவி. காயத்தில் மீது கை வைத்து தேய்க்காதீர்கள். அதனால் சதை கிழிந்து காயம் பெரிதாகும். டாக்டரிடம் காட்டாமல் நீங்களாகவே ஏதாவது மருந்து போடாதீர்கள்.

தீக்காயங்களுக்கு எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அவரச சிகிச்சை அளிப்பார்கள். மருத்துவமனை தொலைவில் இருந்தால், காயம் அதிகம் இருந்தால் 108 சிறப்பு வாகனத்தை அழைக்கலாம். கண்ணில் காயம் ஏற்பட்டால், பட்டாசு மருந்து விழுந்தால் கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.

சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் வாழ்த்துகள்.

- தி.சுந்தர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-07-2018

  18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

 • LavaBombHawaii

  ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்