SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு வங்கத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 30 பேர் பலி: மம்தா பானர்ஜி தகவல்

2017-10-13@ 15:40:17

ஹவுரா: மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், டெங்குவால் இந்த ஆண்டு உயிரிழந்த 30 பேரில் 14 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழந்தவர்கள் என்று கூறியுள்ளார். மேலும், டெங்குக் கொசுவை ஒழிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவமனைகளுக்கும் மாநில சுகாதாரத் துறையும் மேற்கு வங்கத்தில் டெங்குவால் ஏற்படும் இழப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. எனவே டெங்கு கொசுவால் ஏற்படும் உயிரிழப்புக்களை மறைக்கவோ குறைக்கவோ மேற்கு வங்க அரசு முயற்சிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் குறித்து தனியார் ஆய்வகக் கூடங்கள் பொதுமக்களுக்கு வேண்டுமென்றே பீதி ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை அளித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்