SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி கட்டிடங்கள் : பிஞ்சுகளின் உயிருடன் விளையாடும் அரசு நிர்வாகங்கள்

2017-10-13@ 15:21:38

கோவை: கோவை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையினால் 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் சூழல் உருவாகியுள்ளது. கோவையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்கள், வர இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு தாங்காத நிலையில் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது பள்ளிகளின் நிலைமை மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய முறையில் பள்ளிகளை சீரமைத்து தர பெற்றோர்கள் கோரியுள்ளனர்.  

வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆராயந்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை பராமரிப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் மத்திய அரசின் SSA திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம், எங்களிடம் ஒப்படைத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என மாநகராட்சி நிர்வாகம் கூறுவதாக புகார் எழுந்துள்ளது. கட்டிட ஒப்படைப்பு தொடர்பாக உறுதியான அரசாணை வெளியிட்டால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என கூறுகின்றனர் ஆர்வலர்கள்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மாலையில் அவர்கள் வீடு திரும்பும் வரை பயத்துடனே இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அரசு நிர்வாகங்களிடையே ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு பிஞ்சுகளின் உயிர் தான் பணயமா என பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்