SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது : விஜயகாந்த் பேட்டி

2017-10-13@ 01:29:36

சென்னை: ‘அதிமுக ஆட்சி நீடிக்கக் கூடாது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்' என்று விஜயகாந்த் கூறினார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு பழம், ரொட்டி வழங்கினார். பெண்கள் வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தேரடி, பஜார் வீதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு பொய்யான தகவல்களை தெரியப்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சி நீடிக்க கூடாது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்