SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 2.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் : ரூ.12 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது

2017-10-13@ 01:25:45

சென்னை:  சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் புதுப்பேட்டை பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கான ஆய்வை நேற்று மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் விஜயலட்சுமி, சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அப்பகுதியில் கொசுக்களை உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள், டயர் உள்ளிட்ட கழிவு பொருட்களில் தண்ணீர் தேங்கி கிடப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை மாநகராட்சி ஊழியர்களே அப்புறப்படுத்தினர். அப்போது, கழிவு பொருட்களை தேக்கி வைத்த வீடு மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்தும், அகற்றாதவர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும் வியாழன்தோறும் டெங்கு விழிப்புணர்வு நாளாக கருதப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளையும் 2035 சிறு வட்டங்களாக பிரித்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொசு ஒழிப்பு மற்றும்  விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள், டயர் உள்ளிட்ட கழிவு பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட  வீடு மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும், கழிவு பொருட்களை அகற்றாத வீடு மற்றும் கடைகளில் மாநகராட்சி மீண்டும் ஆய்வு செய்து கழிவு பொருட்களை அகற்றும் பணியில் இறங்கியுள்ேளாம்.சென்னையில் 2.50 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழப்பட்டுள்ளது. ரூ.12.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக கண்டறியப்பட்ட வீடு, கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை ரூ.5 ஆயிரம், தொடர்ந்து மூன்றாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதித்து அதன் மூலம் வருவாய் பார்க்க வேண்டிய நிலை மாநகராட்சிக்கு இல்லை. இருப்பினும் மீண்டும் இந்த தவறை செய்ய கூடாது என்பது எங்களது நோக்கம். கொசு ஒழிப்பு பணியில் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்