SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டலூர் பூங்காவில் பிறந்த சிங்க குட்டிக்கு விஷ்ணு என பெயர் சூட்டினார் முதல்வர்

2017-10-13@ 01:22:48

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 8 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என முதல்வர் பழனிசாமி பெயர் சூட்டினார். வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் சிங்கக்குட்டிக்கு நேற்று காலை பூங்கா வளாகத்தில் பெயர் சூட்டும் விழாநடந்தது.  

அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டிய ஜான்சி என்ற பெண் சிங்கத்துக்கும் சிவா என்ற ஆண் சிங்கத்துக்கும் பிறந்து 8 மாதமே ஆன ஆண் சிங்கக்குட்டிக்கு ‘விஷ்ணு’ என பெயர் சூட்டினார். பின்னர் பிறந்த குழந்தை காதில் 3 முறை கூறுவதைப் போல் சொல்லி முதல்வர் மகிழ்ந்தார். பின்னர், சிங்கங்களின் உலாவிடத்தில் கூண்டு வண்டிக்குள் தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவினர் சென்று பார்வையிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்