SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் மூன்று மாதம் பாதுகாப்பு முக்கியம்: கர்ப்பக்கால காய்ச்சல் பிரச்னை உருவாக்கும்

2017-10-13@ 01:19:32

நியுயார்க்: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கு பிரச்னையை உருவாக்கும் என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே முதல் மூன்று மாதம் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.பிறப்பின் போது குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பது குறித்து அமெரிக்காவில் உள்ள டியூக் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அன்னப்பிளவு, இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது குறித்து குழந்தை ஆய்வியல் துறை துணை பேராசிரியர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் எரிக் பென்னர் தலைமையில் ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விலங்கு கருக்கள் மூலம் இந்த ஆராய்ச்சி நடந்தது. அதில் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குள் காய்ச்சல் ஏற்பட்டால், குறிப்பாக வைரஸ் காய்ச்சல் வந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவலை எரிக் பென்னர் தலைமையிலான குழுவினர் அறிவியல் இணையதள பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு குறைபாடுதான் இதற்கு காரணம் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. தற்போது ஆய்வு மூலம் காய்ச்சல் தான் இருதயம் மற்றும் அன்னப்பிளவு, தடை குறைபாடு உருவாக காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் முறைகளையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அசட்டெமினோபென் என்ற மருந்தை முதல் மூன்று மாதத்தில் வழங்கினால் இந்த குறைபாடு ஏற்படாது என்பதை தெரிவித்துள்ளனர். எனவே டாக்டர்கள் மற்ற மருந்துகளை காய்ச்சல் வந்த கர்ப்பிணிகளுக்கு வழங்க பரிந்துரைப்பதை நிறுத்த வேண்டும், குறிப்பாக என்எஸ்ஏஐடி என்ற மருந்தை வழங்கவே கூடாது என்று அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக முதல் மூன்று மாதம் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்