SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி பண்டிகையையொட்டி 6 இடங்களில் பேருந்துகள் நிறுத்தி சென்னை நகருக்குள் அனுப்பப்படும்

2017-10-13@ 01:15:25

சென்னை:  போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களுர் செல்லும் பேருந்துகள். அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து  இயக்கப்படும் பேருந்துகள்:
சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.  பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகள்:சைதாப்பேட்டை பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும்  பேருந்துகள்.

இதற்காக பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை  மாநகர போக்குவரத்து  காவல்துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன்படி, அதிகப்படியான பேருந்து இயக்கம் செய்யப்பட உள்ளதால்,  ஆறு இடங்களில் பேருந்துகளை  நிறுத்தி கட்டுப்படுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஜீரோ பாய்ன்ட், இரும்புலியூர், மதுரவாயல் டோல் பிளாசா, பி.எச் ரோடு, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், தூர்சன்பவர் சிஸ்டம், மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை கோயம்பேடு மலர் வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்திலும், லாரிகள் நிறுத்தம் இடத்திலும், பருப்பு மார்க்கெட்டிலும், நிறுத்திவைத்து, அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்கெட் ‘இ’  ரோட்டில் உள்ள நிறுத்தத்திலிருந்து, ‘பி’  ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை  சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக  ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு  செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல்  பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள் மாதவரம் ஜி.என்.டி சாலை, மாதவரம், பாடியநல்லூர்  டோல்கேட் அருகில், திருவள்ளூர் ரோடு, கள்ளிக்குப்பம் டோல்கேட் , மதுரவாயல் டோல்கேட், வெளிவட்ட சாலை நரசத்பேட்டை, ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், வண்டலூர் பாலம் வழியாக இயக்க  மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாகவும், அடையாறிலிருந்து சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாகவும் பெருங்களத்தூர் வரை செல்லும் வாகனங்களை கான்கார்டு சந்திப்பில் வேளச்சேரி மெயின்ரோடு வழியாக  பெரும்பாக்கம், அகரம்தென் சாலை, வண்டலூர் -  கேளம்பாக்கம் சாலை வழியாக மாற்று பாதையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து  செங்கல்பட்டு வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும், சிப்பெட் கம்பெனி அருகிலிருந்து கிண்டி நோக்கி கத்திபாரா  மேம்பாலம் வந்து, சின்னமலை, தாலுகா அலுவலக ரோடு , கான்கார்டு சந்திப்பு, வேளச்சேரி  மெயின்ரோடு, பெரும்பாக்கம், அகரம் தென் ரோடு, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.
 100 அடி சாலை, பாடியிலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு  வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை  சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை  மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3வது அவென்யூ, 2வது அவென்யூ,  சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு , மாந்தோப்பு வழியாக வாகனம்  மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

 கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா  சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது மெயின்ரோடு, 2வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.அதேபோல்  வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர்  சந்திப்பு , ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.பெருங்களத்தூரில்  போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுமாயின், பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் நோக்கி செல்லும்  வாகனங்கள், பெருங்களத்தூர்  சந்திப்பிலிருந்து காந்தி ரோடு, நெடுங்குன்றம், ஆலபாக்கம், வண்டலூர் - கேளம்பாக்கம்  சாலையில்  திருப்பிவிடப்படுவார்கள். பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர்  இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால், தென்மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர். சாலை  வழியாக   செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்