SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2008ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி விடுதலை

2017-10-13@ 00:45:51

புதுடெல்லி: சிறுமி ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த பல்மருத்துவ தம்பதி ராஜேஷ்  தல்வார், நுபுர் தல்வாரின் 14 வயது மகள் ஆருஷி. இவர் கடந்த  2008ம் ஆண்டில் நொய்டாவில் உள்ள வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் கொலை  செய்யப்பட்டு கிடந்தார். அதோடு, மாயமான தல்வாரின் வீட்டு வேலைகாரர்  ஹேமராஜ்(45) சடலம் அதே வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மீட்கப்பட்டது.   

இந்த கொலை தொடர்பாக கைதான ஆருஷியின் பெற்றோர் தல்வார்  தம்பதிக்கு  காஜியாபாத் சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது. தம்பதியினர்  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை முடிந்து நீதிபதிகள் பி.கே.நாராயணா மற்றும்  ஏ.கே.மிஸ்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பில்,  கொலை செய்ததற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என கூறி, தால்வார் தம்பதிகளை விடுவித்து  உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்