SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர்களுக்கு பணம் தந்த விவகாரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஆர்கே நகரில் டிச.31க்குள் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2017-10-13@ 00:03:55

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி  ஏகே.ஜோதி நேற்று அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி சென்னை ஆர்கே.நகர் தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்து அதற்கான வேட்புமனு தாக்கல்  செய்யப்பட்டு விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டன.

இந்நிலையில் தேர்தலில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில்  பணப்பட்டுவாடா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி  ஏகே.ஜோதி நேற்று வெளியிட்டார். இதையடுத்து அவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை ஆர்கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஒரு  அறிவிப்பை வெளியிட்டார்.  அதில்,” ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம்  அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதில்,”ஆர்கே.நகர்  இடைத்தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து ஆர்கே.நகர் இடைத்தேர்தல்  குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஏப்ரல் 12ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது.
* திமுக சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன்  உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்