உத்தரகாண்ட் மாநிலத்தில் மது விற்பனை 6 மணிநேரம் அதிகரிப்பு

2017-10-12@ 21:15:21

டேராடூன்: பாஜ ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் மது விற்பனை நேரம் 6 மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மது விற்பனையால் கிடைக்கும் வருவாய் குறைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த பட்ஜெட்டின் போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டது. 9 மலை மாவட்டங்களில் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இதர 4 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மட்டும் மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவித்தது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இனி மேல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என நேற்று அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. மது விற்பனை மூலம் ரூ. 2300 கோடி நிதி திரட்ட இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால் தற்போது விற்பனை நேரத்தை இரு மடங்காக மாநில அரசு உயர்த்தி இருப்பதாக அரசு செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான மதன் கவுசிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இளைஞர்களை மது அழிவுக்கு அழைத்து செல்வதாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் விவரம் : இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
ஆந்திர அரசு இணையதளத்தில் இருந்து 1.34 லட்சம் பேரின் ஆதார் தகவல் வெளியானது
கத்துவா சிறுமி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கவில்லை : உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் விளக்கம்
உத்தர பிரதேசத்தில் ரயில் விபத்து: 11 பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்
குஜராத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி : அரசு பேருந்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவர்
தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது
LatestNews
துரோணாச்சாரியார் விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை பரிந்துரை செய்தது பிசிசிஐ
12:58
குட்கா விற்க துணை நின்றவர் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: மு.க.ஸ்டாலின் பேட்டி
12:43
பாலியல் புகாரில் சிக்கிய கால்நடைத்துறை இயக்குநர் தனது பொறுப்பில் தொடர தடை
12:40
உள் மாவட்டங்களில் இன்று வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும்: வானிலை மையம்
12:39
குடியாத்தம் சிவன் கோயில் தேர் திருவிழா : தேரின் இரும்புவடம் துண்டாகி விபத்து
12:37
ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு
12:32