SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கால அவகாசம் நீடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

2017-10-12@ 19:43:24

சென்னை: அங்கீகாரம் இல்லாத மனை, வீட்டுமனை பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 6 மாதத்தில் இருந்து 2018 மே 3ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனுமதியில்லாத  மனை, வீட்டுமனை பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் காலம் 6 மாதத்தில் இருந்து ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். மேலும் மனைப்பிரிவுகளில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைபடுத்தப்படும். ஒரு மனை விற்கப்பட்டிருந்தாலும் மனைப்பிரிவு முழுவதும் வரன்முறைப்படுத்தப்படும். இதேபோல் வரன்முறைப்படுத்த கோரும் மனைகளின் பரப்பில் 10% உள்ளாட்சிக்கு தர வேண்டும். தனி நபர் வாங்கிய மனையை வரன்முறை செய்யும் போது OSR வீதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறை 2016 அக்.20 வரை வாங்கப்பட்ட மனைகளுக்கு வரன்முறைப்படுத்தப்படும்.  இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X