SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை : ரயில்வே போலீஸார் எச்சரிக்கை

2017-10-12@ 17:39:15

சென்னை: விதிகளை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் ரயில்களில் ஏறி ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே போலீஸார் பயணிகளிடம் பட்டாசு உள்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்களையும் பயணிகளுக்கு விநியோகித்தனர். அதில், ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லாதீர், மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் விபத்து ஏற்பட்டால், வெடி பொருள்களால் கூடுதல் நாசம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் பட்டாசுகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் கூறினர்

ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்புப் படையினரை ஏமாற்றி , ரெயில் பெட்டி வரை பட்டாசுகளை எடுத்துச் சென்று விட்டால் அதன்பிறகு யார் கையிலும் சிக்காமல் சென்றுவிடலாம் என நினைக்க வேண்டாம் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளை எச்சரித்துள்ளனர். ரயில் நிலையங்களில் சோதனை செய்வதைத் தவிர, பறக்கும் படையினர், வழியில் எங்கு வேண்டுமானாலும், ரயிலில் ஏறி, உடைமைகளை சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அவர்களது சோதனையில் பட்டாசு இருப்பது கண்டறியப்பட்டாலும், கடும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்