SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களை கட்டியது புதுகை சந்தை மாடுகள் விற்பனை அதிகரிப்பு

2017-10-12@ 14:54:45

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அப்போது மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் விற்பனை நடைபெறும். இங்கு தஞ்சாவூர், சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வரும். ஒவ்வொரு வாரமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்  வரை விற்பனையாகும்.

இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் விவசாயிகள் குடும்ப செலவிற்கு அவர்களின் வீடுகளில் உள்ள ஒரு சில மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்கிய வியாபாரிகள் புதுக்கோட்டை சந்தைக்கு கொண்டு  வருகின்றனர்.

இதனால் இந்த வாரம் வழக்கத்தைவிட ரூ.15 லடசம் முதல் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட புதுக்கோட்டை சந்தையில் அதிக அளவில் கால்நடைகள், வியாபாரிகளை காண முடிந்தது. இதேபோல நாட்டு கோழி  விற்பனையும் மும்முரமாக நடந்தது. இங்கு விற்பனை செய்யப்படும் கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

இது குறித்து வியபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாட்டு சந்தையில் வழக்கத்தைவிட மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதே. விவசாயிகள் தீபாவளி செலவிற்கு வீட்டில் உள்ள ஒரு சில மாடுகளை விற்பனை செய்வர். இதனால் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் வழக்கத்தைவிட நாட்டுகோழி விற்பனை
அதிகரித்தது என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்