SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரியாபட்டியில் வாகன காப்பகமான காவல்நிலையம்

2017-10-12@ 14:49:57

காரியாபட்டி : காரியாபட்டி காவல்நிலையத்தில் விபத்து மற்றும் முறைகேடுகளில் சிக்கும் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், காவல்நிலையம் வாகன காப்பகமாக மாறி வருகிறது.

காரியாபட்டி காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதிகளில், விபத்து மற்றும் முறைகேடுகளில் சிக்கும் டூவீலர்கள், கார், டிராக்டர் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் போலீசார் நிறுத்துகின்றனர். வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து வாகனங்களை மீட்பதில்லை. இதனால், வாகனங்கள் துருப்பிடித்து யாருக்கும் உதவாமல் போய்விடுகிறது. இதனால், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருவோர் நிற்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், குண்டாற்றிலும், தோப்பூர் தெற்காற்றிலும் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை காரியாபட்டி எஸ்ஐ பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்துகிறார்.

இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதால், காரியாபட்டி காவல்நிலையத்தில் போலீசார் வாகனங்களைக் கூட நிறுத்த இடமில்லாமல் உள்ளது. எனவே, காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்