SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவில்லிபுத்தூர் பகுதியில் பராமரிப்பில்லாமல் பல்லிளிக்கும் கிராமப்புற சாலைகள்

2017-10-12@ 14:41:50

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் பகுதியில் கிராமப்புற சாலைகள் பராமரிப்பின்மையால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திருவில்லிபுத்தூர் அருகே பிள்யையார் நத்தம் மற்றும் மேலதொட்டியப்பட்டி கிராங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலதொட்டியபட்டிக்கு செல்ல பிள்ளையார் நத்தம் விலக்கு சாலை அல்லது காதிபோர்டு காலனி சாலை வழியாக செல்லலாம். இந்த இரண்டு சாலைகளும் மழையால் குண்டும், குழியுமாகி மிகவும் மோசமாக உள்ளது. மழை காலங்களில் குண்டும், குழியுமான இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கவனக் குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

பிள்ளையார்நத்தம் பள்ளி அருகே உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, மழைநீர் குளமாக தேங்கியுள்ளது. இதன் வழியாகச் செல்லும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிள்ளையார்நத்தம் மற்றும் மேலதொட்டியபட்டி கிராமங்களில் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. விளைபொருட்களை நகர் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் குண்டும் குழியுமான ரோட்டால் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் ராணுவ வீரர்கள சாலை மோசமாக இருப்பதால் அவதிப்படுகின்றனர்.


இதேபோல, திருவில்லிபுத்தூரில் இருந்து நத்தம்பட்டிக்கு செல்லும் சாலையும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக கட்டையதேசன்பட்டி, அய்யனார்புரம், துலுக்கபட்டி, காடனேரி, குன்னூர், கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம் ஆகிய ஊர்களுக்கும், அழகாபுரி-வத்திராயிருப்பு சாலைக்கும் செல்லலாம். பல்வேறு ஊர்களுக்கு செல்லும் இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, திருவில்லிபுத்தூர் மற்றும் மேல தொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம், நத்தம்பட்டி ஊர்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளருமான ராமசாமி கூறுகையில், ‘திருவில்லிபுத்தூர் பகுதியில் நகர்ப்புற சாலைகள் எவ்வளவு மோசமாக உள்ளதோ, அதே அளவிற்கு கிராமப்புற சாலைகளும் மோசமாக உள்ளது. வத்திராயிருப்பு ஒன்றியத்தில் சேதநாராயணபுரம் பகுதி சாலைகளும் மோசமாக உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சாலைகளை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்