SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயல்பை விட கூடுதல் மழை பெய்தும் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து இல்லை

2017-10-12@ 14:12:00

பட்டிவீரன்பட்டி : இயல்பை விட கூடுதல் மழை பெய்தும் பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் நீர்வரத்தின்றி வெறுமையாக காட்சியளிக்கின்றன. பட்டிவீரன்பட்டி பகுதிகளுக்கு அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி அணையும், ஆத்தூர் காமராஜர் அணையும் முக்கிய நீராதாரங்களாக உள்ளது. பெரும்பாறை மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆத்தூர் காமராஜர் அருகேயுள்ள குடகனாற்றிலிருந்து வெளியேறி தாமரைக்குளம், அத்திக்குளம், ஏந்தல்குளம், செங்கட்டான்பட்டி கண்மாயை நிரப்பும். இதன்மூலம் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வந்தது. மேலும் பொதுமக்களின் குடிநீருக்காக உள்ளாட்சி அமைப்புகள் போட்ட ஆழ்துளை கிணறுகளுக்கும் நீர்வரத்து இருக்கும்.

தற்போது குடகனாற்று தண்ணீரால் தாமரைக்குளம், நரசிங்கபுரம் கண்மாய் நிரம்பி வாடி கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாடிகண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையில் பல இடங்களில் உடைப்பு, ஆக்கிரமிப்பு, விவசாய நிலங்களுக்கு திருப்புதல் போன்ற காரணங்களால் செங்கட்டான்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலக்கோட்டை தாலுகாவில் சீத்தாபுரம், ஊத்துப்பட்டி பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன, மேலும் இப்பகுதியில் குடிநீருக்காக போடப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டு போய்விட்டன.

இயல்பை விட கூடுதல் மழை பெய்தும் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து இல்லாததால் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணறுகள் வற்றி வி்ட்டதால் ஒரு குடம் குடிநீரை ரூ.10 வரை வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது. இதுகுறித்து செங்கட்டான்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘மழையின்றி வறண்டு கிடந்த காலத்தில் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் பல இடங்களில் மண்மேவி காட்சியளிக்கிறது. ஆக்கிரமிப்பும் அதிகளவில் செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு, மண்மேடுகளை அகற்றி குளங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அழிவை நோக்கி அழகு குளம் :

செங்கட்டான்பட்டி குளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை இந்த வழியாக செல்லும் பயணிகள் வாகனங்களை நிறுத்தி ரசித்துவிட்டு செல்வார்கள். சபரிமலை ஐயப்ப பக்தர்களும் குளித்துவிட்டு செல்வார்கள். தற்போது இந்த அழகிய குளம் தண்ணீரின்றி இருப்பது காண்போரையும் அனைவருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்