SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீங்களும் அழகுதான் ஆண்களே!

2017-10-12@ 11:17:38

பெண்கள்தான் அழகில் அக்கறை காட்டுவார்கள் என்று யார் சொன்னது? இப்போதெல்லாம், பெண்களுக்கு நிகராக, சில நேரங்களில் அவர்களை விடவும் கண்ணாடி முன்பு ஆண்கள் அதிக நேரம் செலவிடுகிறார்களாம். சரியான உடைகளைத் தேர்வு செய்யும் ஆண்கள், கம்பீரத்திலும் அசத்துகிறார்கள். தீபாவளி ஷாப்பிங்கில், பெண்களைப் போல் மாய்ந்து மாய்ந்து உடைகளை ஆண்கள் தேர்வு செய்வதில்லை. ஆனால், சரியாகத் திட்டமிட்டால், நேர்த்தியான உடைகளுக்கு ஆண்களும் சொந்தக்காரர்களாகலாம்.

பெண்களைப் போல் உடுத்துவதற்கு, வண்ண வண்ண ஆடைகளோ, விதவிதமான ரகங்களோ, வகை வகையான உடுப்புகளோ ஆண்களுக்கு நிச்சயம் கிடையாதுதான். அதற்காக வளாவளா தொளதொளா உடைகளை அணிந்தால், ஆண்களை யாரும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், வயதை முதிர்ச்சியுடன் காட்டும்.

ஆண்களுக்குக் கட்டம்(Checked), கோடு(stripped), பிளெய்ன் என மூன்று ரகச் சட்டைகள்தான். இந்தத்தேர்வு கச்சிதமாக இருந்தால் கலக்கலாம். ஒல்லியான தேகத்துக்கு ஸ்லிம் பிட் தான் பொருத்தம். நடுத்தர உடல்வாகுக்கு ரெகுலர் பிட், குண்டாக இருந்தால் ரிலாக்ஸ் பிட் எடுபடும்.
சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு அடர்த்தி நிறங்கள் அழகு. மாநிறக்காரர்களை, வெளிர் நிறச் சட்டையும் அடர் நிறப் பேன்ட்டும் அல்லது அடர் நிறச் சட்டையும், வெளிர் நிற பேன்ட்டும் கச்சிதமாக இருக்கும். இவையெல்லாம், விதிமுறை அல்ல. அந்தத் தருணத்திற்கேற்ப, மாறிக்கொள்வதும் மாற்றிக்கொள்வதும் ஆண்களின் அழகு ரகசியம்.

விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தப் பணம் இடம் தருவதில்லையே என்று ஆண்கள் நினைப்பதுண்டு. இந்த எண்ணமே தவறு. மலிவு அல்லது சராசரி விலையுள்ள ஆடைகளாக இருந்தாலும் அவற்றைத் தங்களுக்குப் பொருத்தமாக்குவதுதான் முக்கியம். பிராண்டட் ஆடைகள்தான் தங்களைச் சமுதாயத்தில் உயர்த்தும் என்பதும் தவறான கருத்துதான். சராசரி விலையுள்ள உடைகளில்தான், வண்ணமும், டிசைன்களும் விதவிதமாக இருக்கின்றன. தேர்வு மட்டும் சரியாக இருந்தால், ஆடை ரகசியத்தை அறிந்துணர மற்றவர்களும் விரும்புவார்கள். பணி நிமித்தம் என்றால் பார்மல் ஆடைகள் உகந்ததென்றால், மற்ற நேரங்களில் காஷூவல் ஆடைகளே போதுமானது.

திருமணம், வரவேற்பு, நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, சினிமா, பொழுதுபோக்கு போன்ற நிகழ்ச்சிகளின்போது பார்மல் ஆடைகள் உடுத்த வேண்டும் என்று யார் சொன்னது? திருமணத்துக்கு முழுக்கைச் சட்டையில் கையை மடித்துவிடாமல் கூட வர வேண்டும் என்றெல்லாம் இல்லை. பார்மலாக உடை உடுத்தும்போது அது ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தும். வர்த்தகக் கூட்டங்கள், வர்த்தக நிகழ்ச்சி என்றால் அதற்குரிய ஆடைகள்தான் பொருத்தமானவை.

பேன்ட்டைப் பொருத்தவரை ஜீன்ஸ், வயதைக் குறைத்துக் காட்டும். ஜூன்சுக்கு மற்ற வகைச் சட்டைகளைக் காட்டிலும் டிசர்ட்கள் தான் பொருத்தமானவை. இன் செய்யும்போது பலர் அக்கறையுடன் மேற்கொள்வதில்லை. ஏனோதானோவென்று இன் செய்வதை விட இன் செய்யாமலே இருப்பது நல்லது. விலை கூடுதலான ஆடைகள்தான் சிறந்தது என்ற எண்ணத்தை முதலில் ஆண்கள் கைவிட வேண்டும். மற்றவர்கள் மனதிற்குப் பிடிக்குமா என்றெல்லாம் குழம்பிக் கொள்ளாமல், அவரவர் மனதிற்கு விருப்பமான உடைகளைத் தேர்வு செய்வதே நல்லது. அந்த உடைகள்தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பதுதான் உண்மை. இந்த முறை தீபாவளி ஷாப்பிங்கில், இப்படித்தானே உடைகளைத் தேர்வு செய்யப்போகிறீர்கள்...

ஆண்களின் வலிமை
ஆடைகளிலும்கூட...
அவர்களின் கம்பீரம்
உடைகளிலும்கூட...

பிட்டா இருங்க !
ஆண்களின் அழகைக் குலைப்பது தொப்பை. தொப்பை இருப்பவர்களுக்கு உடைகளும் பொருத்தமாக இருப்பதில்லை. தொப்பையைக் குறைக்க ஓர் அரை மணி நேர, நேர்த்தியான உடற்பயிற்சி போதும். மாறணுமா என்று யோசிக்கலாம். ஆனால், பிட்டா இருக்கணும்னா மாறித்தான் ஆகணும்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DougJonesvictory

  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • mudhalvar_palanisami11

  16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

 • kolkatha_silaii1

  கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

 • heavysnow

  வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

 • 13-12-2017

  13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்