SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படகுகளை மீட்க நாகை மீனவர்கள் இரண்டாவது குழு இலங்கை பயணம்

2017-10-11@ 12:22:40

நாகை: இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களுக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கையில் உள்ள கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 42 விசைப்படகுகளை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை அரசு விடுவித்த 42 படகுளை தமிழக மீனவர்கள் ஒவ்வொரு குழுக்களாக சென்று மீட்டு வருகின்றனர். மேலும் படகுகளை மீட்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு டீசல், உணவு மற்றும் பழுது நீக்க செலவு ஆகிய அனைத்து செலவுகளையும் தமிழக அரசு வழங்குகிறது.

இதனை அடுத்து நாகையில் இருந்து கடந்த 4-ம் தேதி இலங்கை சென்ற மீனவர்கள் 3 பேர் விசைப்படகுகளை மீட்டு கரை திரும்பினர். இந்நிலையில் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்காக நாகை மீனவர்களின் இரண்டாவது குழு 40-க்கும் மேற்பட்ட மீனவர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். இதற்கிடையே, இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட படகுகளின் எஞ்சின்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவற்றை சரிசெய்ய லட்சகணக்கில் செலவாகும் என்றும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்