SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சத்தில் சம்பளம், அமெரிக்க வாழ்க்கை என்பதை உதறி தள்ளி விட்டு பாரம்பரியம் மீட்க புறப்பட்ட தமிழ் இளைஞர்கள்

2017-10-09@ 11:57:21

உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர்.
தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர். மிக அரிதாக கூடுதலாக ஒருநாள் தேவைப்படும்.
அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமீரகம், சிங்கப்பூர் என அனைத்து வெளிநாடுகளுக்கும் ஐந்தே நாளில் டெலிவரி செய்து களத்தில் சாதனை நிகழ்த்துகிறார்கள் நம் தமிழக இளைஞர்கள்.

அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் உயர் பதவிகளில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கனவு ப்ராஜக்ட் ஆன நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தை வெற்றி பெற செய்ய தங்களின் அதி உயர் சம்பள வேலையினை உதறித் தள்ளி விட்டுத் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) பற்றி அவர்களிடம் கேட்டபோது இவ்வாறு கூறினர்: மொழி, கலை, இலக்கியம் ஆகியவை நம் பண்பாட்டுச் சங்கிலித் தொடர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது உணவுக் கலாச்சாரமும் முக்கியம். தித்திக்கும் சுவை, மருத்துவ குணம், என அனைத்து அம்சங்களும் இருந்தும் நமது உணவுப் பண்டங்கள் தனக்கான இடத்தினை இன்று மெல்ல இழந்து வருகின்றன. எனவே இதனை மீட்கும் நோக்கில், சத்தான, சுவையான நம்ம ஊர்ப் பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம்.

அடுத்து தரமான நம் பண்டங்களை ப்ரெஷ்ஷாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கென தனித்த வழிமுறைகளை ஏற்படுத்தி இன்று வெற்றிகரமாக முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களை மிஞ்சும் அதிவேக டெலிவரியினை சாத்தியப் படுத்தி இருக்கிறோம். பிஸ்ஸா, குர்குரே, லேஸ், ஐஸ்க்ரீம் போன்ற பண்டங்கள் ஆக்கிரமித்திருந்த எங்கள் வாடிக்கையாளர்கள் குழந்தைகளின் எண்ணங்களில், இப்போது, பொரி கடலை, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், ஓட்டுப் பக்கோடா போன்ற சுவை மிகுந்த சத்தான நம்ம ஊர்ப் பண்டங்களைக் கொண்டு சேர்த்திருப்பது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களை வெளிக்கொணர்வதே எங்கள் நோக்கமாகும் என்று தங்களின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.

நாட்டுக் கருப்பட்டி நெய் மைசூர்பாகு, கரூர் தேங்காமிட்டாய், மணப்பாறை முறுக்கு, கருப்பட்டி மைசூர்பாக், பள்ளப்பட்டி நெய் பூந்தி, திருநெல்வேலி அல்வா.. இப்படி பெயரைக் கேட்டதும் நாவில் நீர் ஊற வைக்கும் நம்ம ஊர் சிறப்புமிக்க அனைத்துப் பண்டங்களையும் ஒரே இடத்தில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையம் மூலம் இப்பொழுது ஆன்லைனில் வாங்கி சுவைக்கலாம். இது மட்டுமின்றி தீபாவளிக்கென சிறப்பு இனிப்புப் பெட்டகங்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.  பேர் உவகை,  நலம், மகா,  நோ  சுகர், என சிறப்பான தீபாவளி சிறப்பு இனிப்புப் பெட்டிகளை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.  இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், கனடா என அனைத்து நாடுகளுக்கும் சொன்ன தேதியில் தீபாவளி டெலிவரி செய்து நிறைவான சேவையினைத் தருகிறார்கள்.

நாளைய நடைமுறை மாற்றத்துக்கான வித்துக்களான இத்தகைய புதிய முயற்சிகள் நிச்சயமாக நம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியவை. பீசா, பர்கர்களின் மணம் வீசும் தெருக்களில் நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களின் மண் வாசனையினை மெல்லிய தென்றலாய்க் கொணர்ந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com). வாழ்த்துக்கள். நாவூறும் நம்ம ஊர் இனிப்புகளை தீபாவளியன்று ருசிக்க இப்பொழுதே NativeSpecial.com இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

தினகரன் வாசகர்களுக்காக சிறப்பு சலுகையாக NSDHIN எனும் கூப்பனை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில்  பயன்படுத்தி தீபாவளித்  தள்ளுபடியினைப் பெறலாம்.  இது தினகரன் வாசகர்களுக்கான பிரத்யேக தள்ளுபடி.    நண்பர்களுக்கும் பகிரலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

 • sijaapanda

  சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்