SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்ப

2012-12-16@ 11:01:53

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற கருங்கல் நிலைகளில் காணப்படும் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகனாகிய முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டுகள் என்பது தெரியவந்தது. கல்வெட்டில் உள்ள மங்களவாசகத்தை அறிய முடியாத நிலையில் பாண்டியன் தலையும், சேரலஞ்சாலையும், இலங்கையும் தண்டாற்கொண்ட கோப்பரகேசரி பன்மரான கோ ராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு பத்தாவது என தொடங்குகிறது. இதுகுறித்து உதவி பேராசிரியர் கண்ணதாசன் கூறுகையில், ‘ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில் கல்யாணபுரம் எறிந்த விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் உடையாளூரில் காணும் கல்வெட்டில் ராஜேந்திர ராஜாதி ராஜன் என்றும் காணப்படுவதால் இப்பட்டங்களை தந்தையின் மீது கொண்ட பற்றினால் ராஜராஜ சோழன் சூடி கொண்டுள்ளதை அறிய முடிகிறது’’ என்றார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
rite aid load to card coupons centaurico.com rite aid store products


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்