SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

2017-09-30@ 10:54:21

புதுடெல்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல் அரசு செயல்பட்டு வந்தது, கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்துவந்தார், எதிர்க்கட்சிகள் தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து பல கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்தன.

இந்நிலையில், தற்போது  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். 77 வயதான இவர் , மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 3 முறை பன்வாரிலால் பணியாற்றியவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸ் கட்சியில் இருந்த பன்வாரிலால் பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.

 2016ல் ஆஸிம் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். 2017ல் மேகாலயா மாநில  ஆளுநர் பொறுப்பு பன்வாரிலாலுக்கு கூடுதலாக தரப்பட்டது. தனிக்கட்சி தொடங்கி நடத்திய இவர், ஒரு முறை ராஜயசபை எம். பி. ஆகவும் இருந்திருந்தார்.
 
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம்

தமிழ்நாடு, அசாம், பீகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் ஆளுநராக ஜகதீஷ் முகி, பீகார் மாநிலத்திற்கு சத்தியபால் மாலிக், மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி.மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜோஷியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஏற்கனவே இருந்த பேராசிரியர் ஜெகதீஷ் முகிக்கு பதிலாக தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்