SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதை நகரமாக சென்னை மாறி வருவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது : ராமதாஸ் அறிக்கை

2017-09-26@ 20:50:23

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருங்குடியில் ஒரே அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் சில இடங்களில் மட்டும் தான் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. காவல்துறையினர் கண்டுகொள்ளாததன் விளைவாக இப்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. எங்கெல்லாம் டாஸ்மாக் மதுக்கடை உள்ளதோ, அவற்றுக்கு அருகில் ஏதோ ஒரு இடத்தில் கஞ்சா கிடைக்கிறது. அதிகபட்சமாக அரை கிலோ மீட்டர் சுற்றளவில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கல்லூரிகளில் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கஞ்சா சென்னை முழுவதும் கிடைக்கும் நிலையில், இந்த விவரங்கள் அனைத்தும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை விட, காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும். குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் என்னென்ன பலன்கள் கிடைத்தனவோ, அதைவிட பல மடங்கு பலன்கள் கிடைப்பதால் அவர்கள் கண்டுகொள்ள மறுக்கின்றனர். அதனால் சென்னையில் போதை விற்பனையை ஒடுக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மையங்களை திறக்க வேண்டும்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்