SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகரில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

2017-09-26@ 20:35:38

பெரம்பூர் : சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாகீபை   கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (24). இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பகுதியில் சாலையோரத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரகத் நிஷா (20). இவர்களுக்கு முகமது சாகீப் என்ற இரண்டரை வயது மகனும், பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

முன்னதாக, நேற்று காலை வழக்கம்போல் முகமது இலியாஸ் கடைக்கு சென்றுவிட்டார். மதியம் 12 மணியளவில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த முகமது சாகீப் வெகுநேரம் ஆகியும் வராததால் பரகத் நிஷா வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு மகன் இல்லை என்றதும் அக்கம்பக்கத்து வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் யார் வீட்டுக்கும் குழந்தை செல்லவில்லை என்று தெரிந்தது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்  சிறுவன் முகமது சாகீபை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்