SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரிய கண்மாயில் நீர் நிரம்பியதால் 15 ஆண்டுக்கு பின்னர் விவசாய பணி தீவிரம்

2017-09-26@ 10:37:33

திருச்சுழி: திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிறைந்ததால், 15 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சுழியில் சுமார் 550 ஏக்கரில் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் 5 மதகுகள் உள்ளன. மழைக்காலங்களில் குண்டாறில் நீர் வரும்போது கால்வாய் மூலம் பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பும். பின்னர் உபரியாக வரும் நீர் வரத்து கால்வாய் மூலம் திருச்சுழி பெரிய கண்மாயில் நிறையும். இந்நிலையில், சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோயின. இதனால், பெரிய கண்மாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. பெரியகண்மாயில் கருவேலம் மரங்கள் வளர்ந்தும், மதகுகளும் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

கண்மாயை தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,500 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக மாறியது.
இந்நிலையில், தமிழ்பாடி மற்றும் திருச்சுழி பொதுமக்கள் தங்களது சொந்த முயற்சியில் பெரிய கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் தேனி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை அதிகளவில் பெய்ததால், குண்டாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து பந்தனேந்தல் கண்மாயில் நீர் நிரம்பி, உபரி நீராக திருச்சுழி பெரிய கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் சுற்றியுள்ள தமிழ்பாடி, திருச்சுழி, ஒத்தவீடு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதுதவிர விவசாய கிணறுகளில் நீமட்டம் உயர்ந்துள்ளது. இதனால்,
விவசாய நிலங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்