SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை, திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

2017-09-26@ 10:36:23

சீர்காழி: மத்திய மேற்குவங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. கடைமடை பகுதியான சீர்காழிக்கு காவிரி நீர் இன்னும் வந்து சேராத நிலையில், இந்த மழை விவசாயத்திற்கு கை கொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே போல திருவாரூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது சம்பா சாகுபடி துவங்கியுள்ளதால் இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்