SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டாம் பருவத்திற்காக 1.46 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

2017-09-26@ 10:33:33

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1.46 லட்சம் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நேற்று உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ், பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு பருவத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனித்தனியாக இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு முதல்பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றைய தினமே இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை வழங்க, பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து, மாநிலம் முழுவதும் இலவச ேநாட்டு புத்தகம் மற்றும் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

 சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி துறை சார்பில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இதுகுறித்து சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வளர்மதி கூறுகையில், “சேலம் மாவட்டத்தில், 1,548 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.46 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச நோட்டு, பாடபுத்தகம் மற்றும் செஸ் போர்டு ஆகியவை மாவட்டத்தில் உள்ள 21 ஏஇஇஓ அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

 மாவட்டம் முழுமைக்குமான இலவச நோட்டுகள் மற்றும் சேலம் கல்வி மாவட்டத்திற்கான 1 முதல் 5ம் வகுப்பு புத்தகங்கள், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பள்ளியில் இருந்தும், சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு 1 முதல் 5ம் வகுப்பு புத்தகங்கள் ஓமலூரில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல்,சேலம் மாவட்டம் முழுமைக்கான 6 முதல் 8ம் வகுப்பு பாட புத்தகங்கள், மல்லூரில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து ஓரிருநாளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் 3ம் தேதி அன்றே மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்