SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெருங்குது ஐயப்ப பக்தர்கள் சீசன் : விற்பனைக்கு தயாராகும் ராஜஸ்தான் பொம்மைகள்

2017-09-26@ 10:32:04

பழநி: ஐயப்ப பக்தர்கள் சீசன் நெருங்குவதால் பழநியில் ராஜஸ்தான் மாநில பொம்மைகள் விற்பனைக்காக அதிகளவில் தயார் செய்யப்படுகின்றன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சீசனின்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகை தருவர். சீசனில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு பழநி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவர். ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக பழநி அடிவாரம், சன்னதி வீதி, ஐயம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி மற்றும் கிரிவீதிகளில் பூஜைப் பொருட்கள், பொம்மைகள், விளக்குகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்காக ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பொம்மை, மத்தளம் போன்றவற்றை விற்பனை செய்ய வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பழநி நகரிலேயே டெண்ட் அமைத்து தங்கி பொம்மைகள் செய்து விற்பனை செய்கின்றனர். கண்ணை கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகள் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என ராஜஸ்தான் வியாபாரிகள் தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்