SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியலில் கால்பதித்தால் நடிகர் கமல் காணாமல் போய்விடுவார்: அமைச்சர்கள் விமர்சனம்

2017-09-22@ 17:40:39

தூத்துக்குடி: நடிகர் கமல் அரசியலில் கால்பதித்தால் காணாமல் போவார் என்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விமர்சித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தது எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

மேலும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் கூறியுள்ளார். சிவாஜி, பாக்யராஜ் போல நடிகர் கமலும் அரசியலில் காணாமல் போய்விடுவார் என்பது அவரது கணிப்பு. சென்னையை அடுத்த மாதவரத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் நடிகர் கமலை கடுமையாக சாடினார். சினிமாவில் வேண்டுமானால் நடிகர் கமல் முலமைச்சராகலாம் நிஜத்தில் ஒருபோதும் நடக்காது என்று அவர் விமர்சித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்